மருத்துவர்களின் அறிவுறுத்தல்: சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வெடுக்கும் அமிதாப் பச்சன்!

பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், 84 வயதில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்களுக்கு சமூக வலைத்தளப் பதிவுகளிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார். உடல்நலனை மேம்படுத்த ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செயல்பட்டு, தனது பதிவுகள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதை வழக்கமாகக் கொண்டவர் அமிதாப் பச்சன். இந்நிலையில், அவர் தற்காலிகமாகப் பதிவிடுவதை நிறுத்தப்போவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சில நாட்கள் முழுமையாக ஓய்வெடுத்து உடல்நலத்தைத் தேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளேன். எனவே, தற்போது என்னால் எந்தப் பதிவுகளையும் எழுத இயலவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading