ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நானி, கயாடு லோஹர், மோகன் பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியானது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியான இப்படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்களும் ட்ரோல்களும் அதிகமாக வந்தன. இருப்பினும், வசூலில் படம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.136 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
