‘தி பாரடைஸ்’ படத்தின் சிறப்பு பாடலில் நடனமாடும் கீர்த்தி சுரேஷ்..!

நானி கதாநாயகனாக நடிக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. ‘தசரா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கயாது லோஹர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், மோகன் பாபு, சோனல் குல்கர்னி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘தசரா’ படத்தில் நானியுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார்.

இந்த நிலையில், அந்தப் பாடல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தி பாரடைஸ்’ படத்தின் ஸ்பெஷல் பாடல் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகவுள்ளது. கசர்லா ஷியாம் பாடல் வரிகளை எழுத, ஜானகி ரெட்டி மற்றும் பிரபா இணைந்து பாடியுள்ளனர்.ஏற்கனவே வெளியான டீசரில் இடம்பெற்ற பிரம்மாண்டமான மேக்கிங் காட்சிகளும் அதிரடியான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக அனிருத் அமைத்துள்ள பின்னணி இசை படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading