நடிகர் கார்த்தியின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கைதி’. இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தக் கைதி ரீமேக் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் நடித்து இயக்கி வருகிறார். ‘போலா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தக் கைதி படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் அந்தப் படத்தில் ஹீரோயினும் கிடையாது; பாடல்களும் கிடையாது. ஆனால் இந்த இந்தி ரீமேக் படத்தில் 2 ஹீரோயின்களும் நடிப்பதுபோல கதையை மாற்றியிருக்கிறார்களாம்.
இந்த இரண்டு ஹீரோயின்கள் கதாப்பாத்திரத்தில் நடிகைகள் தபுவும், அமலா பாலும் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹீரோயினே இல்லாமல் எடுக்கப்பட்ட படத்திற்கு எதற்கு இரண்டு ஹீரோயின்கள் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. படத்தில் இவர்கள் இருவருக்கும் படத்தில் என்ன கேரக்டர்களை கொடுக்கப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.