Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஹோலி பண்டிகையை தவிர்த்தது ஏன்? – விஜய் தேவரகொண்டா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஃபேமிலி ஸ்டார்”. இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘மதுரமு கதா’ பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்முயூனிட்டியில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, மை ஹோம் ஜூவல் குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்தப் படம் குறித்து ஹீரோ விஜய் தேவரகொண்டா கூறுகையில், “வண்ணங்களால் உடை கறைபட்டுவிடும் என்ற பயத்தில், பள்ளிக் காலத்தில் ஹோலி பண்டிகையை தவிர்த்து வந்தேன். ஆனால், தேர்வுக்காலத்தின் போது அனைவரும் கலர் கலராக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இங்கு ஹோலியை உங்களுடன் கொண்டாடுவது தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கிறது. இப்போது உங்கள் தேர்வுகள் முடிந்துவிட்டதால், ஏப்ரல் 5 ஆம் தேதி எங்களுடன் திரையரங்குகளில் ‘பேமிலி ஸ்டார்’ படத்தை பார்க்க வாருங்கள். இது நம்மைப் போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கதை. குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களின் கதை. ஒரு நல்ல சினிமா அனுபவம்..” என்றார்.

ஸ்ரீமணியின் வரிகள் மற்றும் கோபி சுந்தரின் இசையமைப்பில், ஸ்ரேயா கோஷலின் குரலில் ‘மதுரமு கதா’ மூன்றாவது சிங்கிள் அழகாக அமைந்துள்ளது. பாடலின் வசீகரிக்கும் வரிகள், அதை உடனடி ஹிட் ஆக்கியுள்ளது. இதுவரை வெளியான “ஃபேமிலி ஸ்டார் ” படத்தின் அனைத்துப் பாடல்களும் உடனடி சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன, மேலும் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘மதுரமு கதை’ பாடலும், இசை ரசிகர்களை கவர்ந்திழுத்து அதே போல் பெரிய ஹிட்டாகியுள்ளது. “ஃபேமிலி ஸ்டார்” படத்தின் டிரைலர் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகிறது.

“ஃபேமிலி ஸ்டார்” படத்தை தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, மார்த்தாண்டன் கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News