Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விஜய்க்கு நோ சொல்லி அஜித்க்கு எஸ் சொன்ன ஸ்ரீலீலா… அப்போ த்ரிஷா என்ன பண்ண போறாங்க….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீலீலா தெலுங்கில் முண்ணனி நடிகையாகவே மாறியுள்ளார்.நடிகையாக இவர் 2019 இல் கிஸ் என்கிற கன்னடமொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதேபோல் 2021 இல் பெல்லி சாண்டாடி என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார்.தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீலீலா ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

இதேபோல் தமிழிலும் ஸ்ரீலீலாவை‌ நடிக்க வைக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என ஆர்வம் காட்டுகின்றனர்.அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்‌.இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின.

அதேசமயம் நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பாடல் ஒன்றிற்கு ஸ்ரீலீலாவுடன் இணைந்து விஜய் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட இருப்பதாக தகவல் வெளிவந்தன ஆனால் ஸ்ரீலீலா‌ இப்படியொரு பாடலுக்கு ஆட்டம் போட விருப்பம் இல்லை என சொல்லி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால் த்ரிஷா விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக முன்பு சொன்னது தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.‌

- Advertisement -

Read more

Local News