Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

வலுக்கும் விஜய் ஆண்டனி ப்ளூசட்டை மாறன் மோதல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளிவரும் சிறிய மற்றும் பெரிய படங்கள் என புதிய படங்களை பார்த்து யூடியூப் சேனல்கள் விமர்சனங்களை செய்து வருவது எல்லோரும் அறிந்ததே.

இதில் தமிழ் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளவர் தான் ப்ளூ சட்டை மாறன்.இவர் ப்ளூ சட்டை அணிந்து மட்டுமே பல விமர்சன வீடியோக்களை வெளியிடுவதால் அவருக்கு அந்த ப்ளூ சட்டையே அடையாளம் ஆனது. தொடர்ந்து பல படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே அதிகம் கொடுத்து வருவதாக பல காலமாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இவர் பலருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறார் எனவும் தங்கள் படங்களின் வசூலை காலி செய்து வருகிறார் என தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகளை குவித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு காரணமாக வெடித்துள்ள சர்ச்சையை விவரித்துப் பேசும் நோக்கத்தில் பிஸ்மி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சிலநாட்களுக்கு முன் வெளியான ரோமியோ படம் ஓடாததற்கு மிகப்பெரிய காரணம் ப்ளூ சட்டை மாறன் சொன்ன தவறான விமர்சனம் தான் என்பதை போல விஜய் ஆண்டனி பதிவுகளை போட, அதற்கு விஜய் ஆண்டனிக்கு அவர்களுக்கு நடிக்கவே தெரியாது என பதிலடி கொடுத்தார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில், இதுதொடர்பாக விவரித்து ஒரு வீடியோவையே வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் நல்ல படங்களை எடுத்தால் எந்த ப்ளூ சட்டை மாறன் எவ்வளவு நெகடிவ் விமர்சனங்களை கொடுத்தாலும் படம் ஓடும் என பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ப்ளூசட்டை மாறன் என்ன நினைத்தாரோ ‘ப்ளூ சட்டை மாறன் அறிவு ஜீவியா? அரைவேக்காடா ? பிஸ்மி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! என ஒரு கேப்ஷனை போட்டு பதிவு செய்து இருக்கிறார்.இதைக்கண்ட ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு விஜய் ஆண்டனியை கடுப்பேத்துகிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News