Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுமார் 23 வருடங்களுக்கு பிறகு திரையுலக ஜாம்பவான்களான ராமராஜன் மற்றும் இளையராஜாவை இணைந்துள்ள படம் தான் சாமான்யன்.இப்படத்தை ராக்கேஷ் இயக்குகிறார்‌.தம்பி கோட்டை மற்றும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களை இயக்கியவர் தான் ராக்கேஷ்.இப்படத்தை பற்றி சமீபத்தில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதாவது, இந்த படத்தின் முதல் சாமான்யன் என்பது இளையராஜவும் மற்றொரு சாமான்யன் ராமராஜனும் தான். எந்தவொரு பெரிய பிண்ணனி இல்லாமல் வந்து இசை உலகை ஆளும் இளையராஜாவும், அதே போல சினிமாவில் பல வெற்றி படங்களையும் சாதனைகளையும் படைத்த ராமராஜனும் தான் சாமன்யன்கள் என்றார்.இப்படத்தில் நடித்திருக்கும் ராமராஜன் புகைபிடித்தல் மது அருந்துதல் இல்லாத கதைகளையே தேர்வு செய்து சமூக எண்ணத்தோடு நடிப்பவர்‌. அதேபோலலே சமூக கருத்துகள் கலந்த கமர்சியல் படமாக இருக்கும்.

இந்த படம் ரொம்ப ஈசியா ஆடியன்ஸ் உடன் கனெக்ட் ஆகும் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சினை பற்றி தான் இந்த படம் பேச போது, தினசரி வாழ்க்கையில் பொருளாதார பிரச்சினை சந்திக்காதவங்க அப்படினு யாரும் இல்லை.பணம் சார்ந்த பிரச்சினை ஒருத்தருக்கு எப்படியெல்லாம் கஷ்டத்தை ஏற்படுத்தும்னு இந்த படத்தில சென்டிமென்ட்டா எமோஷனலா கண்ணு முன்னாடி கொண்டு வந்துருப்பேன் என்றார்.

இந்த படத்துக்கு முதல்ல ஹீரோ இவர் இல்ல. தயாரிப்பாளர் மதியழகன் அவங்க தான் ராமராஜன் சார்ர இந்த படத்தோட கதாபாத்திரத்தில நடிக்க வைச்சா எப்படி இருக்கமுனு கேட்க என் மைண்ட் வாய்ஸ் ஆமா அட இது நல்லா இருக்கேனு சொல்ல ராமராஜன் சார் தான் இந்த படத்துக்கு ஹீரோனு முடிவு பண்ணியாச்சு. அதே சமயம் ஒரு யதார்த்தமான முகம் தேவைப்பட்டுச்சு அத இவரு பூர்த்தி பண்ணிட்டாரு.

ராமராஜன் அவர்கள் கிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடி என் நீங்க நடிக்கறது இல்லனு கேட்க அதுக்கு அவரு, என்னுடைய ரசிகர்கள் அப்படியே இருக்காங்க, சில ரசிகர்கள் டிவி நிகழ்ச்சிகளாவது நடிங்கனு சொல்லுவாங்க ஆன டிவில நடிக்க ஆர்வம் இல்லை. சினிமா தான் உலகம்னு இருந்த எனக்கு பலனா இப்போ இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்குனு சொன்னாங்க.

கதையை சொல்றதுக்கு முன்னாடியே குடி, புகை, போதைனு எதுவும் இருக்க கூடாதுனு சொல்லிட்டாரு.ராமராஜன் சார் மேலூர் கணேஷ் தியேட்டரில் வேலை பார்த்தவரு, பழைய முதலாளி மேல இருந்த பாசத்தால அங்க சென்டிமென்டா சில நாள் சூட்டிங் பண்ணோம்.முதல்ல எதிர்பார்த்தளவுக்கு அவர் நடிக்கல ஆனா கொஞ்சம் நாள் அப்புறம் கம் பேக் கொடுத்து அசத்தி நடிச்சாரு.அவரு நடிச்ச காட்சிகள் பார்த்து அவரே கண்கலங்கிட்டார்.

இசைஞானி இளையராஜா கிட்ட கதை சொல்லறப்ப பாடல்களே நாங்க வைக்கல.ராஜா சார் நானும் ராமராஜனும் சேர்ந்தாலே பாட்டுதான் பிரமாதம்னு சொல்லி முதல பாட்டு இல்லமா ஷூட் பண்ணி கொண்டு வர சொல்லிட்டார்.பாட்டு எந்த எடத்துலனு வரும்னு அவரு கேட்க ஹீரோயினி இல்ல அதனால பாட்டு வைக்கலனு சொன்னோம், அதுக்கு உன் படத்துல ரெண்டு பாட்டு ஒளிஞ்சிருக்குனு சொல்லி அதற்கான இடத்தையும் தேர்வு செஞ்சி தத்திவா…தத்திவா…னு ஒரு பாட்டும் ஒளிவீசும் எதிர்காலம் வாழ்வின் வைபோகம் என்ற பாட்டையும் எழுதி இசையமைத்து பாடி கொடுத்தாரு என்றார் இந்த சாமான்யன் படம் ராமராஜன் அவர்களுக்கு நிச்சயம் கம் பேக்காக அமையும் என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News