Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ராயன் படத்தை முந்தும் குபேரா! விரைவில் டீசர் வெளியீடு..

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘குபேரா’. மும்பையில் உள்ள தாராவியை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் இந்தப் படத்தின் கதைகளம் உருவாகி வருகிறது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதது.

இதனிடையே, தனுஷ் இயக்கியும் நடித்தும் உள்ள ‘ராயன்’ படமும் வெளியாக தயாராகியுள்ளது. ‘பா.பாண்டி’ படத்திற்குப் பிறகு இதுவே தனுஷின் அடுத்த இயக்கும் நடிக்கும் படம்.’ராயன்’ படத்திற்கு முன்பாகவே ‘குபேரா’வின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில், ரோட்டோர உணவுக்கடையை நடத்தி வரும் தனுஷின் தம்பிகளாக நடித்துள்ளவர்கள் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன். மேலும், செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் ஆகியோர் இப்படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்பு வெளியான படத்தின் கதாபாத்திர போஸ்டர்களுக்குப் பிறகு, அடுத்ததாக இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குபேரா படம் மும்பையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் கேங்ஸ்டர் கதையாகும். இதில் நடிகர்கள் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் தனுஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.ராயன் பட வெளியீடு தள்ளிப்போய் கொண்டிருக்கும் நிலையில் குபேரா படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.இதனிடையே ‘ராயன்’ படத்திற்கு முன்பாகவே ‘குபேரா’வின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News