நடிகர் ரவி மோகன் கடந்த சில வருடங்களில் நடித்த திரைப்படங்கள் அதிர்ச்சி தரும் தோல்விகளை சந்தித்துள்ளன. தற்போது, இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.


இதன் பிறகு, அடுத்த படத்திற்கான கதையை தேர்வு செய்வதில் ரவி மோகன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், ‘அவள்’, ‘நெற்றிக்கண்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய மிலிந்த் ராவ், ரவி மோகனை சந்தித்து புதிய படத்திற்கான கதையை விவரித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.