எதிலும் ஆக்ஷன் எங்கும் ஆக்ஷன் இப்படி ஆக்ஷன் சேஸிங் படங்களுக்கான அடையாளம் என்றாலே ஹரி என்று சொல்லலாம்.விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை படங்களை எடுத்த ஹரி அவரை வைத்து ரத்னம் என்ற படத்தை எடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.ஆனால் இந்த ஹாட்ரிக் எந்தளவுக்கு சிறந்தது என்பதே ரசிகர்களின் விமர்சனங்களை பொறுத்துதான். ரத்னம் படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், முரளி ஷர்மா, சமுத்திரகனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் விஷால் எப்போதும் போல இது நம்ப ஏரியா என்றவாறு சண்டக்கோழி, தாமிரபரணி படங்களில் எந்த மாதிரி ஆக்ஷனில் தெறிக்கவிட்டிருந்தாரோ அதேபோல் இந்த படத்திலும் பறக்கவிட்டு இருக்கிறார். பிரியா பவானி சங்கருக்கு இந்த படத்தில் டபுள் ஆக்ஷன். தனக்கு கொடுத்த ரோல்-ஐ சற்றும் குறைவின்றி நிறைவாக முடித்திருக்கிறார். சமுத்திரகனி மற்றும் கெளதம் மேனன் தங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்ய மெயின் வில்லனாக மாஸ் காட்டியுள்ளார் தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா.
படத்தின் நிறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹரி இயக்கம் என்றாலே ஆக்ஷன் தான் அப்படி இருக்க ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் அளவுக்கு தாமிரபரணி படத்தை போல எமோஷனல் காட்சிகளில் க்ளாஸ் காட்டியுள்ளார்.பிரியா பவானி சங்கருக்கும் விஷாலுக்கும் இடையேயான உறவு என்ன என்பதில் வைத்திருக்கிறார் ஹரி ட்விஸ்ட்.பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் என பல சண்டை இயக்குநர்கள் சேஸிங் சீன்களை அல்டிமேட்டாக கொடுத்துள்ளனர்.
படத்தின் குறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹீரோயினை காப்பாற்ற எத்தனை பேர் வந்தாலும் விடாமல் பறக்கவிடும் ஹீரோவாக தோற்றமளிக்க இது கொஞ்சம் என்னடா இது என்றவாறு கேட்க்க தோன்றுகிறது.படத்தின் முதல் பகுதியில் தப்பை தட்டிக் கேட்கும் நாயகனாக காட்டி கதையை கடைசியில் நாயகியின் பக்கம் மொத்த படத்தையும் திருப்பி விட்டது படம் வலுவிலக்க காரணமாகிவிட்டது.
அதேபோல் யோகி பாபு காமெடி என்ற பெயரில் இந்த படத்தில மொக்கைப் போட ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பின்னணி எல்லாம் ஒருவிதத்தில் ஓகேவாக அமைந்துள்ளது. பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஹரி மற்றும் விஷாலின் கமர்ஷியல் படங்களை ரசிக்க கூடியவராக இருந்தால் இது ஒரு முறை பார்க்கும் படம்.