மம்மூட்டி மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராவார். 1983ஆம் ஆண்டு ‘விசா’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அவர் அறிமுகமானார். ‘மௌனம் சம்மதம்’ படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமானார். அதன் பின்னர், அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்தார்.

2018ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான ‘பேரன்பு’ படத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் வெளியான பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மமூட்டி ‘டர்போ’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டியும் நடித்திருந்தார். இந்தப் படத்தை வைசாக் இயக்கியுள்ளார். முன்னதாக அவர் மோகன்லால் நடித்த ‘புலிமுருகன்’ படத்தை இயக்கியிருந்தார்.

மிதுன் மானுவேல் தாமஸ் ‘டர்போ’வின் கதையை எழுதியுள்ளார். முதலில் படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிறகு தேதி மாற்றப்பட்டு, மே 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து “டர்போ மோட் ஆக்டிவேடட்” என்ற தலைப்பில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது –