Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

புஷ்பா தி ரூல்…புஷ்பா 2 படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டில் வெளியான புஷ்பா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான பான் இந்தியப் படமாகும். ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் ஆகியோரும் நடித்திருந்தனர். லாரி டிரைவராக நடித்த அல்லு அர்ஜுன் எல்லா வில்லன்களையும் வீழ்த்திய பிறகு செம்மர கடத்தல் மன்னனாக மாறினார். இந்தப் படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, புஷ்பா-தி ரூல் படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், காளி வேடத்தில் அல்லு அர்ஜுன் காதில் கம்பல், வளையல் புடவை அணிந்து ஆக்ரோஷமான காளியாக மாறி இருந்தார். இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா.. புஷ்பா.. புஷ்பா ராஜ்’ படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்தப் பாடலுக்கு விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். நாகேஷ் அஷிஷ், தீபக் ப்ளு ஆகியோர் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். முதல் பாகத்திற்கு இசையமைத்ததற்காக தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News