Touring Talkies
100% Cinema

Wednesday, October 15, 2025

Touring Talkies

புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொடரில் கர்ணனாக பாலிவுட் நடிகர் பங்கஜ் தீர் காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொலைக்காட்சியில் பி.ஆர்.சோப்ரா இயக்கத்தில் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொடரில் கர்ணனாக நடித்து பலராலும் அறியப்பட்டவர் நடிகர் பங்கஜ் தீர். ‘சந்திரகாந்தா’ எனும் நாடகத்தில் மன்னர் ஷிவ் தத் ஆகவும் நடித்து புகழ்பெற்றவர். மேலும், ‘தி கிரேட் மராத்தா’, ‘யுக்’ மற்றும் ‘பதோ பஹு’ போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களிலும் ‘சடக்’, ‘சோல்ஜர்’, ‘பாட்ஷா’ போன்ற பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை அளித்து வந்த போதிலும் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

- Advertisement -

Read more

Local News