Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பாலிவுட்டில் வசூல் சாதனை படைக்குமா டோலிவுட் படம்? #KALKI

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படம் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டியதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஹிந்தியில் மட்டும் இப்படம் கடந்த வாரம் வரை 280 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ வசூலைவிட இது சில கோடிகள் அதிகம். இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப் பிடித்தால் 300 கோடி வசூலைத் தாண்ட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு முன்பு ‘கேஜிஎப்’ படம் 400 கோடிக்கும் அதிகமாகவும், ‘பாகுபலி 2’ படம் 500 கோடிக்கும் அதிகமாகவும் ஹிந்தியில் வசூலித்துள்ளன. 2024ல் இதுவரை வெளியான ஹிந்திப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் ‘கல்கி 2898 ஏடி’ ஆகும். தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News