Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

நோ ஸ்பீச் ஒன்லி ஆக்ஷன்!‌ ராகவா லாரன்ஸ் விவசாயிகளுக்கு செய்த மிகப்பெரிய உதவி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராகவா லாரன்ஸ் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும், அவர் சமூக பணிகளுக்கும் மக்கள் நலனுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர். அவரது பல்வேறு நல்ல செயல்கள் மக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், அவர் ‘மாற்றம்’ என்ற பெயரில் ஒரு புதிய சமூகப் பணியைத் தொடங்கியுள்ளார். நேற்று உழைப்பாளர் தினத்தன்று, அவரது அறக்கட்டளை மூலம் ‘மாற்றம்’ திட்டத்தின் முதல்கட்டமாக விவசாயிகளுக்கு 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அது குறித்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் மாஸ்டர் நான் இதை செய்வேன். அதை செய்வேன் என்று சொல்ல மாட்டேன். செஞ்சு காட்டுவேன். இது மாற்றமா இல்லையான்னு நீங்க சொல்லுங்க என கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் புது டிராக்டர்கள் வந்து இறங்குவதும் காட்டப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்த தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.அது மட்டுமின்றி இந்த சமூகப் பணியில் எஸ் ஜே சூர்யாவும் அவரை தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோரும் கைகோர்த்துள்ளனர்

- Advertisement -

Read more

Local News