திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் மாளவிகா மோகனன். அவர் தமிழில் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் கவனத்தை ஈர்த்தார்.

தனுஷ் உடன் இணைந்து நடித்த மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சிலம்பம் தற்காப்பு கலையை கற்றுக்கொண்டார்.

சிலம்ப பயிற்சியின் காணொளிகளை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்.சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தார். இவை சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

