Saturday, September 14, 2024

திரையரங்குகளை அதிரவிட்ட நடிப்பின் அரக்கன்… சூர்யாவின் சார்ட்டர்டே படத்தில் பாராட்டுகளை பெறும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித், சிம்ரன் ஆகியோர் நடித்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. அதன் பின் விஜய் நடித்த ‘குஷி’ படத்தை இயக்கி, அதே படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்து இயக்கினார். அடுத்து ‘நியூ’ படத்தை தமிழில் இயக்கி கதாநாயகனாகவும் அறிமுகமானார். அந்தப் படத்தை மகேஷ் பாபு நடித்த தெலுங்கு மொழியிலும் இயக்கினார். இயக்கத்தை விட, நடிப்பின் மீது அதிக ஈர்ப்புக்கொண்டவர் எஸ்.ஜே. சூர்யா. ‘அன்பே ஆருயிரே’ மற்றும் ‘இசை’ படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘இறைவி’ படம் அவரது நடிப்புக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் மகேஷ் பாபு நாயகனாக நடித்த ‘ஸ்பைடர்’ என்ற தமிழ், தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தார். அந்த படம் வெற்றி பெறாதபோதும் சூர்யாவின் வில்லத்தனமான நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றுவரை அந்தப் படத்தில் அவர் நடித்த காட்சிகள் ‘மீம் கன்டென்ட்’ ஆக தொடர்ந்து பரவி வருகின்றன.

அதன் பின் தமிழில், “மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா, இந்தியன் 2, ராயன்” ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவர் தனது வில்லத்தன நடிப்புக்கென தனிப்பட்ட பாணியை உருவாக்கியுள்ளார், மேலும் அவருக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் வில்லனாக நடித்துள்ள தெலுங்கு படம் ‘சரிபோத சனிவாரம்’ நேற்று வெளியானது. இதில் அவர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பும், பேச்சும் தெலுங்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News