Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தாமு வெங்கடேஷ் பட் மோதலா? குக் வித் கோமாளியால் நடந்த பிரச்சினை தான் என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2006 ஆம் ஆண்டு முதல் மீடியா மேசன் தனது நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் வழங்கி வருகிறது. விஜய் டிவியில் அது இது எது, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் என பல வெற்றி நிகழ்ச்சியை விஜய் டிவிக்கு கொடுத்துள்ளது. பிக் பாஸ்க்கு பிறகு ஒரு கலகலப்பான நிகழ்ச்சி வேண்டும் என்று விஜய் டிவி கேட்டுள்ளது.


அப்போது தான் மீடியா மேசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி சூப்பர் ஹிட்டாக்கியது. பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் டிவி மீடியா மேசனைத் தொடர்பு கொண்டு இனிமேல் இந்நிகழ்ச்சியை நீங்கள் தயாரிக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.

பல ஆண்டுகளாக விஜய் டிவிக்கு வெற்றிகரமான நிகழ்ச்சிகளை வழங்கி வந்த தயாரிப்பு நிறுவனம், திடீரென இப்படி சொன்னதால் விஜய் டிவியிலிருந்து விலகியது.மேலும் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை பற்றி பேசுவதற்காக செல்லும்போது தான் இங்கு சமையல் நிகழ்ச்சி தொடங்கலாம் என்று எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி மொத்த டீமுமே சன் டிவிக்கு செல்வதாக தான் பிளான் பண்ணி இருந்தார்கள்.

இந்த சமயத்தில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் விரைவில் மற்றொரு நிகழ்வில் சந்திப்போம் என்று சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு கூறினர்.ஆனால் தாமு சில மணிநேரங்களில் வீடியோவை நீக்கிவிட்டார்.காரணம் விஜய் டிவி தாமுவை அழைத்து சமாதானமாக பேசி இந்த நிகழ்ச்சியில் அவரை தொடர்ந்து இருக்க வைத்துள்ளனர். வெங்கடேஷ் பட் சமையல் சமையல் நிகழ்ச்சியிலிருந்து மீடியா மசோனுடன் விரைவில் வெளியாகவுள்ள டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் பயணித்து வருகிறார். தாமு திடீரென பதிவை நீக்கிய உடன் வெங்கடேஷ் பட் ஒரு பதிவு போட்டிருந்தார்.

அந்த பதிவில்,னை கண் மூடினால் உலகம் இருண்டு விடுமோ, பதிவை நீக்கினால் உறைத்தது மறைந்து விடுமா, இதனால் உனக்கு கிடைப்பது எதுவானாலும் மகிழ்ச்சி என்றும் எனக்கே, சொல் தவறினாலும் நட்பு மாறாது என்று வெங்கடேஷ் பட் அதில் சொல்லிருந்தார்.என்னதான் இவர்கள் வெவ்வேறு சேனல்களில் பணியாற்றினாலும் அவர்கள் நட்பு மாறாது என்பதை வெங்கடேஷ் பட் உணர்த்தியுள்ளார் என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News