இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அவர், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழ் சினிமாவில் அருண்விஜய் நடித்த தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தாலும், பெரிய அளவில் புகழ்பெற முடியவில்லை. பின்னர், கார்த்தியின் ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார், அது பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்டகால காதலர் ஜாக்கி பக்நாணியை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர், பாலிவுட் ஜோடியான ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா முக்கிய நிகழ்ச்சியினை நடத்தினர்.

சில பிரபலங்கள் நேரில் கலந்து கொள்ள முடியாமல், இணையத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.திருமணத்திற்கு பிறகும் அதே அளவிலான கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.