Tuesday, November 19, 2024

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க கூடாது என புகார்… கிளம்பிய புது பிரச்சினை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில சிம்புவும் நடிக்கிறார். படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்த ப்ரோமோ சில நாட்களுக்கு முன்புதான் வெளியாகி பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பை பெற்றது.இந்தச் சூழலில் சிம்புவுக்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் அளித்திருக்கிறார் அதில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது என புகார் அளித்துள்ளார். முன்னாதக ஒப்புக்கொண்டவாறு கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக்கொடுக்க தவறியதால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.இது சிம்புவுக்கு மட்டுமின்றி தக் லைஃப் படத்துக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்க சிம்பு கமிட்டானார். ஆனால் அந்தப் படத்தில் வேறொரு நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் பரவின அதற்கு பிறகு அந்த படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வலம் வந்தன அத்தோடு அந்த படத்தை குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

இந்த பிரச்சினை முன்பில் இருந்தே நீடிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அதற்கு சிம்புவுக்கு 9 கோடி ரூபாய்வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் அதில் 4 கோடி ரூபாய்வரை பணம் அவருக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் பணத்தை வாங்கிய சிம்பு கொரோனா குமார் படத்தை தவிர்த்து மற்ற படங்களில் நடித்துவருகிறார் எனவும் அவருக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.இவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை சிம்பு அளிக்க வேண்டும் இல்லையென்றால் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News