Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி… எவ்வளவு கோடி தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் வில்லனாக நடிக்க வரும் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி தனது திறமையை மேலும் மேலும் மெருகேற்றுபவர் தான் விஜய் சேதுபதி.இந்த சமயத்தில் சமீபகாலமாக வில்லனாக நடிக்க வேண்டாம் ஹீரோவாக நடியுங்கள் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்ட நிலையில் இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று சொன்னது மட்டும் இல்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

எடுத்த உடனே ஹீரோவாக எல்லாம்‌ நடிக்காமல் சிறிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி சூப்பர் ஹிட்டான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து பெரிதும் வரவேற்பைப் பெற்றார்.
அந்நேரத்தில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வர ஆரம்பித்தனர் இவர்களின் தேர்வு விஜய் சேதுபதியை வைத்து தங்களது படத்தை எடுப்பதாக இருந்தது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற‌ படங்களின் மூலம் வரிசையாக ஹிட் கொடுத்தார். தனது வித்தியாசமான தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டுமா என்ன வில்லனாகவும் நடிப்பேன் என பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்து கெத்து காட்டினார் விஜய் சேதுபதி.
அதோபோல ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தார். பின்னர் அவரது ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மகாராஜா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். பிசாசு 2 படத்திலும்‌ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.அதாவது ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என படக்குழு கேட்டுக்கொண்டதற்கு தனது சம்பளமாக 20 கோடி ரூபாய் கேட்டதாகவும் அதை படக்குழு ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.வில்லனாக நடிக்க வேண்டும் என வரும் கோரிக்கைகளை தடுக்கவே வில்லனாக நடிக்க சம்பள பணத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News