ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு படத்துக்காக சம்பளம் பெற்று இசையமைக்கும் இசையமைப்பாளருக்கு, அந்த பாடல்கள் எப்படி சொந்தமாக இருக்க முடியும் என்பது குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.
பாடல் வரிகள், இசை மற்றும் பாடலாசிரியரின் குரல் ஆகிய மூன்றும் சேர்ந்தால்தான் ஒரு சிறந்த பாடல் உருவாகும் என்பதை வைரமுத்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்த “வா வா பக்கம் வா” பாடலை எந்தவித அனுமதியுமின்றி கூலி பட அறிமுக வீடியோவில் பயன்படுத்தியது குறித்து சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.