Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்? LCU போல PCU-ஆ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கேஜிஎஃப் யூனிவர்ஸிலும் நடிகர் அஜித் இணையவிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விடாமுயற்சி படத்தை நிறைவு செய்யவுள்ள நடிகர் அஜித் குமார் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

கேஜிஎஃப் 1 மற்றும் 2 படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரசாந்த் நீல். யஷ் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிய நிலையில், தெலுங்கில் பிரபாஸ் நடித்த சலார் 1 படத்தை இயக்கியும் வெற்றி பெற்றார். அடுத்து சலார் 2 படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அடுத்து அஜித்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேஜிஎஃப் யூனிவர்ஸில் அஜித் குமார் ஒரு முக்கிய அங்கமாக இணையவிருப்பதாகவும், கேஜிஎஃப் 3 படத்தில் யஷ் மற்றும் அஜித் குமார் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்கிற கேள்வியும் எழுகிறது. பிரசாந்த் நீலை ஏற்கனவே டோலிவுட் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் புக் செய்து விட்டதாக கூறுகின்றனர். கேம் சேஞ்சர் படத்தை முடித்து விட்டு இன்னொரு படத்தில் நடித்து வரும் ராம் சரண் அடுத்ததாக பிரசாந்த் நீல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும், தேவரா படத்தை முடித்த கையோடு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர். கேஜிஎஃப் 3ம் பாகம் வெளியாக இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இதற்கிடையில் அஜித்தை பிரசாந்த் நீல் எப்படி இயக்கவிருப்பது தெரியவில்லை. மல்டி ஸ்டார் படமாக பிரசாந்த் நீல் உருவாக்கினால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News