Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கேப்டனுக்கு விருது எங்க போச்சு? அனுதாபம் பெற தான் விருது அறிவிப்பா?கொந்தளிக்கும் ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அரசியல்வாதி என்பதை விட நல்ல மனிதர் தான் கேப்டன் விஜயகாந்த்.கடந்த வருட இறுதியில் உடல்நல குறைவினால் இம்மண்ணில் இருந்து மறைந்தார்.‌அவருக்கு ஒட்டுமொத்த மக்களும் திரையுலகமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.அவர் நல்லடக்கம் செய்த இடத்தில் மக்கள் இன்றுவரை வந்தவண்ணம் தான் உள்ளார்கள் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றார்கள்.

அவர் அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு சொன்னதை செய்யவில்லை எல்லாம் சும்மா பேச்சு தான் கொந்தளித்துள்ளனர் விஜயகாந்த் ரசிகர்கள். அதாவது விஜயகாந்த் இறந்த சமயத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று டெல்லியில் விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படாதது பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருது ஏன் வழங்கவில்லை என இது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் மத்திய அரசு அடுத்த கட்ட விழாவில் விருது வழங்கப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டது.ஆனாலும் கேப்டன் விஜய்காந்த் ரசிகர்கள் கேப்டன் இறந்த சமயத்தில் அனுதாபத்தை பெறுவதற்கு தான் விருது அறிவித்தீர்களா? அல்லது தேமுதிக ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்காததால் தாமதிக்கிறீர்களா? என சரமாரியாக விளாசி ‌வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News