இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், அரசியல் பின்னணியில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ளது “தலைமைச் செயலகம்” என்ற வெப் சீரிஸ்.

தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் “தலைமைச் செயலகம்” சீரிஸைத் தயாரித்துள்ளார்.இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒருவரின் இடைவிடாத அதிகார ஆளுமை, பேராசை, வஞ்சகம் ஆகியவை கலந்து இங்கு நடக்கும் அரசியலை பேசும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
இந்த சீரிஸின் ட்ரெய்லரை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.
