Touring Talkies
100% Cinema

Sunday, October 5, 2025

Touring Talkies

ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்பட்ட எலும்பு முறிவு – விரைவில் அறுவை சிகிச்சை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, ஐஸ்வர்யா ராய் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க தனது மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் பயணம் செய்தார். அப்போது அவரது கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தது.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் ஐஸ்வர்யா ராய் என்ன ஆச்சு என்று கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஐஸ்வர்யா ராய் ஒரு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. அதிலும் கட்டுப்போட்ட கையுடன், வித்தியாசமான உடையில் கேன்ஸ் விழாவில் பங்கேற்றார்.தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சிலிருந்து மும்பை திரும்பியுள்ளார். அடுத்த சில நாட்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஐஸ்வர்யா ராய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News