Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை தமன்னா ஐபிஎல் ஸ்ட்ரீமிங்கில் மோசடி செய்துள்ளதாக மோசடி வழக்கு ஒன்று அவர் மீது பாய்ந்துள்ளது. இதற்காக அவர் முன்பாக ஆஜராக சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.இந்த தகவல் இணையத்திதல் தீயாக பரவி வருகிறது.

சுந்தர் சி-யின் அரண்மனை 4 அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் தம்மன்னா நடித்துள்ளார், இந்நிலையில் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் தொடர்பான வழக்கில் தற்போது தமன்னா நன்றாக மாட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தம்மன்னா ஃபேர் பிளே ஆப் மூலம் சட்டவிரோதமாக ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மோசடியில் தமன்னா ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.நடிகை தமன்னாவுக்கு இதுகுறித்து மகாராஷ்ட்ரா சைபர் ஐடி விங் தற்போது சம்மன் அனுப்பி உள்ளனர். வருகின்ற ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னா இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சைபர் கிரைம் போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதேபோல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்த சட்ட விரோதமான ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஆனால் அவர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக சொல்லி தற்போது வர இயலாது வேறொரு தேதியில் ஆஜராகிரேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News