Tuesday, November 19, 2024

எல்லாம் போச்சு… காதல் தான் காரணம், கில்லி ஹீரோயினி நான் தான்…கிரண் கொடுத்த ஷாக்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

த்ரிஷா எல்லாம் இல்லை நான் தான் நடிச்சிருக்கணும் ஆச்சரியமான தகவல் ஒன்றை பகிர்ந்த நடிகை கிரண்.சுமார் 20 வருடத்திற்கு பிறகு ரீ ரிலீசாகி பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறது கில்லி திரைப்படம்.இப்படியிருக்க கில்லி படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தான் தான் நடித்திருக்க வேண்டும் என்று நடிகை கிரண் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூரியா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 2004ல் வெளியான மாபெரும் ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் தான் கில்லி. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், , நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம், பாண்டு, வினோத் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி என பலர் நடித்திருந்தனர். ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களும் பேசப்படும் அளவுக்கு படம் சூப்பர் ஹிட்டானது.

பக்கா மாஸாக வெளியான கில்லி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.இப்படத்தின் டிக்கெட் புக்கிங் விவரங்களை வைத்து யூகித்து பார்க்கும் போது முதல் நாளில் மட்டுமே படம் உலகம் முழுவதும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை கிரண் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்றில் கில்லி படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் நான் தான் நடித்திருக்க வேண்டும் ஆனால் நான் அப்போது காதலித்துக்கொண்டு இருந்தேன் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் தற்போது நான் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக கொண்டாடப்படுவதை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு இது‌ என்று நடிகை கிரண் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News