பாலா சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தனது தனி திறமையால் பிரபலமானார். அப்போதிருந்து KPY பாலா என்று அழைக்கபடுகிறார்.பாலாவைப் பொறுத்தவரை, யாருக்கு எங்கு உதவி தேவைப்பட்டாலும் ஓடி ஓடி உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவர்.
இதற்கு முன் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.இவர் மருத்துவ வசதி இல்லாத மலைவாழ் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார்,பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் இளைஞருக்கு பைக் வாங்கி கொடுத்தார், இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல பல உதவிகளை செய்துவருகிறார்.
சின்னத்திரையில் ஜொலிக்கும்போது பெரிய திரைக்கான கதவு திறக்கப்படுவதால் பாலாவுக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஜுங்கா, தும்பா, சிக்ஸர், காக்டெய்ல், புலிக்குட்டி பாண்டே, லாபம், நாய் சேகர், தேஜாவு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” போன்ற படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
பாலா சமீபத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக சென்றார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய பாலா, “மாற்றம் என்ற அமைப்பில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் கேட்டபோது என் வாழ்க்கையில் யாரும் எனக்கு உதவவில்லை. இப்போது என் விருப்பம் என்னிடம் கேட்பவர்களுக்கு உதவ வேண்டும், “இல்லை” என்று சொல்லக்கூடாது என்று மனம் திறந்து பேசியுள்ளார்.