Monday, April 22, 2024

ஆக சிறந்த படைப்பாளி பசி துரை காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வித்தியாசமான கருத்துகளின் மூலம் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர். பசி துரை சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ரஜினி, கமல், மோகன் போன்ற முண்ணனி நடிகர்களின் படங்களையும் இயக்கி இருக்கிறார். புதுமுகங்களையும் அறிமுகம் செய்து‌ வைத்துள்ளார் பசி துரை.

அவரின் மிகவும் ஆக சிறந்த படைப்பான பசி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. மிகவும் எளிமையான வாழ்க்கையை நகரத்தின் கடைக்கோடியில் வாழும் மக்கள் படும் பாடுகளை மிகவும் உண்மையாகவும், நேர்த்தியாகவும் திரையில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய படம் தான் பசி. இவரின் இப்படமே இவருக்கு அடைமொழியும் ஆனது‌ கடைசிவரை ‘பசி’ துரை என்றே அழைக்கப்பட்டார்.

இவர் கன்னட மற்றும் ஹிந்தி படங்களையும் இயக்கி உள்ளார் சில படங்களை தயாரித்தும் உள்ளார். நடிகர் ரஜினியின் அறிவுறுத்தலின் படி சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் ஒரு கல்யாண மண்டபத்தை நிறுவி மேற்பகுதியில் அவர் குடியிருந்து கொண்டு, கீழ்ப்பகுதியைக் கல்யாண காரியங்களுக்காக வாடகைக்கு விட்டு வாழ்ந்து வந்தார்.

இவரைத் தொடர்ந்து அவருடைய மகன்கள் யாரும் சினிமாவில் முகம் காட்டவில்லை அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.பசி துரை அவர்கள் முதுமையால் தனது 84வது வயதில் இறந்திருக்கிறார்.அவரது பசி திரைப்படம் தமிழில் இதுவரை வெளியான படங்களில் தலைசிறந்த 100 படங்கள் எவையெவை என கணக்கெடுக்கும் போது அதில் ஒன்றாக இன்றைக்கும் நிச்சியமாக மதிக்கப்படும்.அவரது ஆகச்சிறந்த படைப்புகள் அவர் மறைந்தாலும் என்றும் அவரை பற்றி பேசி கொண்டே தான் இருக்கும்.

- Advertisement -

Read more

Local News