Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அவர் நடத்துவது நாடகம்…புஸ்லி ஆனந்த் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேச்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தற்போது அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், சந்திரசேகர் புஸ்ஸி ஆனந்த் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் புஸ்ஸி ஆனந்த்தை குற்றம் சாட்டியதாக நினைக்கலாம். ஆனால், உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.புஸ்ஸி ஆனந்த் தன்னை ஆதரிக்க ஒரு ஆன்லைன் குழுவை உருவாக்கி இருக்கிறார். அந்த குழுவில் விஜய் கூட இணைந்துள்ளார்.

எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாததை புஸ்ஸி ஆனந்த் செய்கிறார். ரசிகர் சந்திப்பிற்கு வரும்போது, களைப்பால் மேஜையில் படுத்துக்கொண்டிருப்பதாகப் புகைப்படம் எடுத்து அதை ஆன்லைன் குழுவில் பகிர்ந்து, பிறரிடம் பகிர்ந்து லைக் வாங்கும்படிக் கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு நாடகமாக நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதைக் கண்ட விஜய் , தங்களுக்காக உழைத்து களைத்த நிலையில் அவர் இப்படிப் படுத்திருப்பதாக நினைத்து, அவரை மேலும் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.இதுபோன்ற நபர்களுடன் இணைந்திருக்கும்போது, அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News