லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசர் அதிரடியாக பக்கா கமர்ஷியலாக வெளியாகியுள்ளது. முன்னதாக பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றது போல இந்த டைட்டில் டீசரிலும் வாட்ச்கள் திரையை நிரப்புகின்றன.அந்த அப்பாவும் தாத்தாவும வந்தார்கள் போனார்கள் என்ற ரஜினியின் பழைய படத்தில் இடம்பெற்றிருந்த டயலாக்கும் இந்த டைட்டில் டீசரில் இடம்பெற்றுள்ளது.
நினைத்தாலே இனிக்கும் படம் நடிகர் ரஜினிகாந்தின் திரை பயணத்தில் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. கமல்ஹாசனுக்கு வில்லனாக நாம் கண்ட ரஜினி இப் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்திருந்து அசத்தியிருப்பார். இப் படத்தில் ஜெகமே தந்திரம் என்ற பாடலுக்கு சோலோவாக மாஸான ஆட்டம் போட்டிருந்தார் ரஜினி. இப் பாடலில் இடம்பெற்ற வரிகள் தான் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற வரிகள்.
இந்த கூலி படத்தில் தங்கம் கடத்தல் நடக்கும் குடோனில் புகுந்து எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினிகாந்தின் கைகளில் எடுக்கும் வாட்ச்களால் ஆன சங்கிலி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு என்று எதிரிகளை பறக்கவிடுகிறார். இதைதொடர்ந்து பிண்ணியில் D-I-S-C-O டிஸ்கோ ஒலிக்க தன்னுடைய கூலி பேட்ஜ் மீதுள்ள ரத்தத்தை துடைக்கிறார் ரஜினிகாந்த்.
தமிழில் முன்னதாக கூலி என்ற படம் வெளியாகியுள்ளது.அப்படத்தின் டைட்டில் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது சில கேள்விகளை எழுப்பியுள்ளது.தற்போது கூலி படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் மங்களூர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜ்இந்த ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டு சென்னை வரவுள்ளார்.
இதையடுத்து கூலி படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இது மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்றும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.