Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அடுத்த வெற்றியை கொடுக்க தயாரான சூரி… ஆகஸ்ட் 23ல் வெளியாகிறது ‘கொட்டுக்காளி’ திரைப்படம்! #KOTTUKAALI

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் தான் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல ஆகசிறந்த நடிகன் என தனது நடிப்பின் மூலம் நிரூபித்தார். அதைதொடர்ந்து வெளியான கருடன் படத்தின் மூலம் நடிப்பில் மிரட்டிய சூரி அடுத்து கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார்.

கூழாங்கல் படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ். அடுத்ததாக இவர் இயக்கி உள்ள படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். வாழ்வியல் தொடர்புடைய யதார்த்த படமாக உருவாகி உள்ளது.படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி படம் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News