படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பாடல் வரிகளின் முக்கியத்துவத்தை பற்றிய கருத்துகளைக் கூறியது இளையராஜாவின் குடும்பத்தினரை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. நேற்று வைரமுத்து மறைமுகமாக இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கும் விதமாக பேசியிருந்தார்.

இதற்கிடையில் தற்போது பெரும் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது.இளையராஜா சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர் இசையமைத்த பாடல் கூலி படத்தின் டைட்டில் டீசரில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வைரமுத்து பேச்சு குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நேற்று வெளியிட்ட வீடியோவில் வைரமுத்துவைத் கடுமையாக எச்சரித்து பேசியுள்ளார்.வைரமுத்துவை வளர்த்தது நாங்கள் தான் என்றும், இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும், வைரமுத்துவுக்கு நன்றி உணர்வு இல்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், வைரமுத்து நல்ல பாடலாசிரியர் என்றாலும் நல்ல மனிதர் அல்ல எனக் கூறினார். இனி வைரமுத்து இளையராஜாவைப் பற்றி தவறாக பேசினால் வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், வைரமுத்து தனது புதிய ட்வீட்டில் பாடல் வரிகள் தான் படத்திற்கு பலம் என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார்.