Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அசுரத்தனமாக காட்சியளித்த சூரி….கருடன் டிரைலர் வெளியீடு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கருடன்’ திரைப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நடிகர் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூரி ‘கருடன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கம் செய்துள்ளார். படத்தின் டீசர் சில மாதங்கள் முன்பு வெளியிடப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.வெற்றிமாறன் கதை எழுத, சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் வெற்றிமாறனே இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சசிகுமார் மற்றும் உன்னிமுகுந்தன் மிக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். உன்னி முகுந்தனின் விசுவாசியாக சூரி கதையின் முக்கியமான பகுதியாக உள்ளார். உன்னி முகுந்தனுக்காக எந்த சவாலையும் தாண்டி செயல்படுகின்றார். டிரைலர் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, சூரியின் மாறுபட்ட நடிப்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News