Thursday, August 15, 2024

வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க சார்…பெரிய ரோஜா மாலையுடன் சென்று விஜய்யை வாழ்த்திய பிரபலம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடித்து இயக்குனர் தரணி இயக்கி ப்ளாக் பஸ்டர் திரைப்படமான கில்லி ரீ ரிலீஸாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அப்படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.அப்படத்தை வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தை சேர்ந்த சக்திவேலன் தற்போது நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்தியது மட்டுமின்றி மிகப்பெரிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் தந்தையால் வந்தவன் எனவும், எஸ்.ஏ சந்திரசேகர் படத்தில் அறிமுக நாயகனாக தமிழ் சினிமாவிற்குள் வரும் போது இந்த மூஞ்சி எல்லாம் வியாபாரம் ஆகாது என விமர்சித்த தமிழ் சினிமா தற்போது அந்த சினிமா உலகிற்கே தளபதியாக மாறியுள்ள நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்ததை கேட்டு ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது தமிழ் சினிமா.

இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் கில்லி திரைப்படம் ரீ ரீலீஸாகி வசூல் சாதனை செய்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் கோட் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த விநியோகஸ்தர் சக்திவேலன் மிகப்பெரிய ரோஜா மாலையை விஜய்க்கு அணிவித்தார் அதை அன்பாக ஏற்ற விஜய்க்கு கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வரவேற்ப்பையும் சாதனையும் குவித்து வருவதற்காக பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இதுதான் சரியான சமயம் மனதில் நினைப்பதை என, ஒரே ஒரு கோரிக்கை சார் என நடிகர் விஜய்யிடம் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி விட வேண்டாம் சார். வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க, வியாபாரத்துக்காக சொல்லல சார், தியேட்டர்ல வந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்க என விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ள வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் ‌வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News