கமல்ஹாசன் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். தமிழ் புத்தாண்டு அன்று தற்போது கோலிவுட்டின் புது ஜோடியான சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கமல்ஹாசன் உடன் உணவு உண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி உள்ளன.கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் நடித்துவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் 2 படத்தில் இணையவில்லை ஆனால் தக் லைஃப் படத்தில் கமலோடு இணைந்துள்ளார்.தக் லைஃப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகி உள்ளன.

சில வாரங்களுக்கு முன்னதாக நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் தாங்கள் என்கேஜ்ட் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்கள். இவர்கள் மகா சமுத்திரம் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். அதற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க விட்டாலும் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் நிச்சயம் செய்துக்கொண்டார்கள்.

இந்நிலையில் சித்தார்த் அதிதி ராவ் மட்டுமின்றி கமல்ஹாசனுடன் மெக்ஸிகன் இயக்குநரான அல்ஃபோன்ஸோ குரான் இவர்கள் அனைவரும் ஒன்றாக உணவு உண்ணும் போட்டோக்கள் இணையத்தில் பரவின.கிராவிட்டி, ரோமோ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்தவர் தான் அல்ஃபோன்ஸோ குரான்.கமல்ஹாசன் அவர் நடித்த மருதநாயகம் படத்தின் புகைப்படங்களை மெக்ஸிகன் இயக்குனரிடம் காட்டி அதைப்பற்றி விளக்கும் புகைப்படங்கள் வெளியாகின.இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில் அவற்றின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
