Tuesday, November 5, 2024

பிரமாண்ட செட் ரெடி, சாங் ரெடி! அனல் பறக்கும் போகும் ரஜினியின் ஓபனிங் சாங்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.இந்நிலையில் இப்படத்தில் ஓபனிங் சாங் ஒன்றிற்காக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு‌ வருகின்றது.

இயக்குனர் ஞானவேல் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஜெய்பீம் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.வேட்டையன் படத்தில் இந்தி ஸ்டார் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்திற்காக நடிகர் ராணா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் 25-ம் தேதி இந்தப் படத்தின் ஓபனிங் பாடல் காட்சியைப் படமாக்க தயாராகி கொண்டு இருக்கிறது படக்குழு. பூந்தமல்லி அருகே இந்தப் பாடல் காட்சி படமாக்க பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வேட்டையன் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கான அப்டேட்கள் ஒவ்வொன்றாக வந்தவண்ணம் உள்ளன‌.இதன் டைட்டில் டீஸர் வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். வேட்டையன் படமும் தலைவர்171 படத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

- Advertisement -

Read more

Local News