நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படம் 20 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான் நாகேந்திர பிரசாத் அப்படத்தினை குறித்த அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
அதாவது, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கில்லி திரைப்படத்திற்கு ரசிகர்களாக உள்ளார்கள் என்பதே உண்மை.அதோடு அந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் போது அதில் வரும் வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை மனப்பாடமாக சொல்லும் பாடும் ரசிகர்கள் ஏராளம்.
இப்ப ரீ ரிலீஸான கில்லி படத்தை தியேட்டரில புதுசா புதுப்படம் ரிலீஸ் ஆன மாதிரி கொண்டாடுறாங்க. நான் போயிருந்த தியேட்டர் பாக்க திருவிழா மாதிரி தான் இருந்துச்சு அவ்வளவு கூட்டம். அந்த படத்தில் நடிச்ச எனக்கே படத்தை 20 வருஷம் கழிச்சு பார்க்கிறப்போ ரொம்ப புதுசா இருந்துச்சு… ஒவ்வொரு ரசிகருக்கும் அப்படி தான் இருந்திருக்கும் நினைக்கிறேன்.
மக்களுக்கு என்ன சொல்லவா வேணும்? 2004 இல் கில்லி படம் ரிலீஸ் ஆனப்போ நான் சென்னையிலேயே இல்லை. அப்போ ரசிகர்களுடைய கொண்டாட்டத்தை பார்க்க முடியவில்லை. எனக்கு அது ஒரு குறை ஆகவே இருந்துச்சுச்சு
இப்போ இருபது வருஷம் கழிச்சு இந்த கில்லி ரீ ரீலீஸால எனக்கு இருந்த குறை காணாம போயிடுச்சு. இப்படி எல்லாம் நடக்கணும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல.எனக்கு சண்டை காட்சிகளில் நடிப்பது பிடிக்கும் என்பதால் எனக்கு சில ஸ்டண்ட் ஷார்ட்ஸ் வச்சாரு இயக்குனர் தரணி சார். அதை நான் பண்றதை பார்த்து விஜய் “பிரசாத் நீ ரொம்ப நல்லா பண்ணுறியேன்னு சொல்லி பாராட்டுனாரு அத நான் மறக்க மாட்டேன்.
அது மட்டும் இல்ல கில்லி படத்துக்காக 7 ஏக்கரில் மகாபலிபுரத்தில் தான் ஷெட் போட்டு இருந்தாங்க. அதில் தான் நாங்க எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தோம்.அந்த நாட்கள் எப்பவுமே இனிமையானவை தான் அதை என்னைக்குமே மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியாக நாகேந்திர பிரசாத் அவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.