Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சுதந்திர தினத்தன்று மோதும் மூன்று படங்கள்… அடுத்தடுத்து திரைக்கு வர வரிசைகட்டி நிற்கும் பல திரைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024ல் கோலிவுட்டில் கொண்டாட்டத்தை பெரிய வெளியீட்டோடு ஆரம்பித்து வைத்தது என்றால் அது கடந்த வாரம் வெளியான ‘இந்தியன் 2’ எனலாம். அடுத்த வாரம் ஜூலை 26ம் தேதி ராயன் படம் வெளியாக உள்ளது.அதற்கடுத்து ஆகஸ்ட் 2ல் ஜமா, மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, வாஸ்கோடகாமா ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தங்கலான், அந்தகன் ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகின்றன. அந்தப் படங்களோடு ‘ரகு தாத்தா’ படமும் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இந்தப் படங்கள் மோத உள்ளன.வாழை படம் ஆகஸ்ட் 23ம் தேதியும், ‘தி கோட்’ படம் செப்டம்பர் 5ம் தேதியும், மெய்யழகன் படம் செப்டம்பர் 27ம் தேதியும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்திற்குப் பிறகு வரும் பண்டிகை நாள் ஆயுத பூஜை, விஜயதசமி. அந்த விடுமுறை நாட்களில் அக்டோபர் 10ல் கங்குவா படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படத்திற்குப் போட்டியாக இன்னும் எந்தப் படமும் அறிவிக்கப்படவில்லை.அது போல தீபாவளி நாளான அக்டோபர் 31ம் தேதிக்கு அமரன் படம் வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். அந்த நாளில் இன்னும் சில படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட ‘வேட்டையன்’ ஆயுத பூஜையில் வரப் போகிறதா, தீபாவளியில் வரப் போகிறதா என்பது இன்னும் தெரியவில்லை. அப்பட அறிவிப்பு வந்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படங்களில் மாற்றம் வருமா என்பதும் போகப் போகத்தான் தெரியும்.அதேபோல் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் நிலையில் படப்பிடிப்பை விரைவில் முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போதைக்கு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மட்டும் மூன்று படங்கள் மோதப் போகின்றன.

- Advertisement -

Read more

Local News