Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஓட்டுப்போட வந்த கேஜிஎஃப் ராக்கி! யாஷ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி போஸ்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யாஷ்-ஐ இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய திரைப்படம் தான் கே.ஜி.எஃப் மற்றும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.கேஜிஎஃப் 3 படத்தின் அப்டேட்களை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

தற்போது நடிகர் யாஷ் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் அடுத்ததாக டாக்ஸிக் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான யுவா என்ற‌ திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. மற்றபடி கன்னடத்தில் திரைப்படங்களின் இந்த வருட நிலை மந்தமாக உள்ளது.

கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடைந்த நிலையில் கர்நாடகாவில் பிரபலமான நட்சத்திரங்களான பிரகாஷ் ராஜ், யாஷ், கிச்சா சுதீப் உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர்.

அதே போல கேரளாவிலும் நடந்த வாக்குப்பதிவில் மம்மூட்டி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் வாக்குகளை செலுத்தினார்கள்.நடிகர் யாஷ் வாக்கு செலுத்திய பின்னர் மீடியாவை சந்தித்து அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கேஜிஎஃப் படத்தின் ஹீரோ என்ட்ரி போல வந்த அவரை ரசிகர்கள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது.நடிகர் ரஜினிகாந்தின் பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதம் கதம் என சொல்லும்போது கொடுக்கும் போஸ்-ஐ ஓட்டுப் போட்ட விரலை கொண்டு யாஷ் காட்டியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News