Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

உதயநிதி கொடுத்த ஆஃபர்… மறுத்த ஸ்டார் பட தயாரிப்பாளர்… அப்போ ஸ்டார் படத்தின் கதி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக ஏங்கிக் காத்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம் அப்படி ஏங்கி கொண்டிருந்த கவினுக்கு தற்போது ஜாக்பாட் ஆக வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்றால் மிகையாகாது.இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் நல்ல வசூல்லை அள்ளி லாபம் பார்த்தால் இவரும் தவிர்க்க முடியாத நடிகர் ஆகிவிட்டார்.‌

ஸ்டார் என்ற படத்தில் இயக்குனர் எலன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் கவின். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.‌ இந்த ஸ்டார் படத்தில் இவருக்கு ஜோடியாக ஆதிதி போஹன்கர் நடித்துள்ளார். இதற்கு முன்பு. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் சரோஜாதேவி என்ற ரோலில் நடித்திருக்கிறார்.நடிகர் லால் கவினுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ரொமான்டிக் படங்களில் நடிக்கும் கவின் தனக்கென ஒரு இளம் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.இந்த ஸ்டார் படத்தை உதயநிதி‌ தேர்தல் சமயத்தில் பிஸியாக இருந்த பொழுது கூட ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து படத்தை முழுவதுமாக பார்த்தாராம்.இந்த படம் அருமையாக உள்ளதென்றும் இப்படத்தை பார்த்த பின்பு இந்த படத்தை நானே வாங்கி கொள்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

இதில் என்னவென்றால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பொருத்தவரை ஒரு படத்தை வாங்குகிறார்கள் என்றால் கடைசியில் தான் லாபத்தின் பங்கு கொடுப்பார்கள் என்பது வழக்கம் அந்த வகையில் ஸ்டார் படத்திலும் அதே ஆஃபரை உதயநிதி தந்திருக்கிறார் ஆனால் படத்தின் தயாரிப்பாளர் எனக்கு முதலிலேயே பணம் வேண்டும் என்று சொல்லி மறுத்தவிட்டாரம்.

இதனால் தற்போது ஸ்டார் படம் வியாபாரத்திற்காக காத்துக்கொண்டு இருப்பதாகவும் இது கவினுக்கு ஒரு தலைவலியாக அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.இந்த காரணத்தால் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கூட ரிலீஸ் தேதியை முடிவுசெய்து அறிவிக்க முடியாமல் தடுமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News