Thursday, April 25, 2024

இன்றைய சினி பைட்ஸ்

Share

- Advertisement -

கங்குவா டீசர் பார்த்து சிறுத்தை சிவாவை அழைத்து சூர்யாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்!

கில்லி ரீ ரீலீஸ் குதூகலத்தில் ஐ லவ் யூ சொன்ன பிரகாஷ் ராஜ்!

- Advertisement -
- Advertisement -
  • கங்குவா டீசர் பார்த்து சிறுத்தை சிவாவை அழைத்து சூர்யாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்!

கங்குவா படத்தின் டீசரை பார்த்த நடிகர் அஜித் சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டியுள்ளார்.சூர்யாவின் டெடிகேஷன் சூப்பராக இருக்கு என்றும் அதோடு சூர்யாவுக்கு குட்டி அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் அஜித். அதாவது இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோலை விட நீங்கள் இன்னும் ஸ்கோர் பண்ணனும் என்று கூறியியதாகவும் சூர்யாவும் அதற்கு சிரித்துக் கொண்டே சரி என்று சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • அபர்ணா தாஸ்க்கு டூம் டூம் வைரலாகும் ஹாப்பி கிளிக்ஸ்!

பீஸ்ட் மற்றும் டாடா படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக்கிற்கும் திருமணம் இனிமையாக நடந்துள்ளது.அபர்ணாதாஸ் மற்றும் தீபக் இருவரும் சேர்ந்து மனோகரம் என்ற படத்தில் நடித்திருந்தனர்.அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்து இப்போது கல்யாண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் திருமணம் குருவாயூரில் எளிமையாக நடந்துள்ளது அந்த திருமணத்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றன.

  • ரசிகர் இறந்த செய்தியை கேட்டு ஓடோடி வந்த ஜெயம் ரவி!

சென்னையில் எம் ஜி ஆர் நகர ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த கே கே நகர‌ இளைஞர் ராஜா (வயது 33) சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.ராஜா ஜெயம் ரவி மீதுள்ள மிகுந்த அன்பால் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து வந்தார்.தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும் மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியாக இருந்தாலும் நிச்சயமாக நான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

  • கில்லி ரீ ரீலீஸ் குதூகலத்தில் ஐ லவ் யூ சொன்ன பிரகாஷ் ராஜ்!

கில்லி ரீ ரிலிஸை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் இதை பற்றி திரிஷா சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரிஷாவுக்கும் என் நன்றிகள் பல என கூறியுள்ளார்.

  • சூது கவ்வும் 2 படத்தில் பாட்டு பாடி ப்ரோமோஷன் செய்த பிரேம் ஜி

மிர்ச்சி சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளிவரவுள்ள சூது கவ்வும் 2 படத்தின் இரண்டாம் பாடலான ‘மண்டைக்கு சூரு ஏறுதே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரேம் ஜி, ஸ்டீபன் செக்கரியா மற்றும் கர்ணன் கணபதி இணைந்து பாடியுள்ளனர். ஸ்டீபன் செக்கரியா சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பாடகர்.அவரின் பல பாடல்கள் யூடியூப்ல் வைரலானவை தான்.பிரேம் ஜி இந்த பாடலில் தானும் பாடியுள்ளதாகவும் அதை அனைவரும் நிச்சயம் கேட்டு என்ஜாய் செய்யும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News