இதுவரை வெளிவந்த அரண்மனை பட பாகங்கள் அனைத்துமே காமெடி காட்சிகள், ஆங்காங்கே கவர்ச்சி தூரல்கள் இவை கலந்த கலாட்டா மசாலா கலந்த கலவை தான் படங்கள்தான் சுந்தர்.சி என்றாலே இது தான் லேபிள். இது மட்டும் போதாது என, எக்ஸ்டராவக களமிறங்கியது தான் இந்த பேய் ஜானர். இந்த மூன்றும் சேர்ந்த கலவையாக வந்த, அரண்மனை 1, அரண்மனை 2 படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பை தந்த நிலையில் அரண்மனை 3 தத்தளித்தது.
என்னதான் அரண்மனை 3 படம் பெரிதாக எடுப்படவில்லை என்றாலும் சற்றும் அசராத சுந்தர் சி. இந்த கோடை விடுமுறையை டார்கெட் செய்து அரண்மனை 4 படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். குஷ்பு தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இசையில், தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து மே 3ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகியுள்ளது அரண்மனை 4.
இந்த படத்தில் சரவணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சுந்தர் சி ஒரு வழக்கறிஞர்.செய்துஅப்பா வழி அத்தையாக கோவை சரளா, சகோதரி கதாப்பாத்திரங்களில் தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.தான் காதலித்தவரோடு வேறு ஊருக்கு ஓடிப்போய் குடும்பம் நடத்துகிறார் தமன்னா, 10 வருடங்கள் கழித்து திடீரென அவரது வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொள்கிறார். விஷயத்தை கேள்விப்பட்டு அத்தையோடு தங்கையின் ஊருக்கு போய் அவரது அரண்மனை மாதிரியான ஒரு வீட்டுக்குள் தங்குகிறார் சுந்தர் சி.
அந்த இடத்தில் அப்போது படிப்படியாக தங்கை வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றிய க்ளூ கிடைக்க ஆரம்பித்த நிலையில் அதை நூல்பிடித்துச் செல்லும்போது பல அதிர்ச்சி பின்னணிகளை கண்டுபிடிக்கிறார் சரவணன். பிரச்சினைகளை தீர்த்து தங்கை குடும்பத்தை சரவணன் எப்படி காத்தார் என்பதை, கொஞ்சம் காமெடி, அப்பப்போ த்ரில்லர் ஹாரர் என காட்டியுள்ளது இப்படம்.
இப்படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை திரைக்கதை வேகமாக நகர்கிறது. இந்த முதல் பாதியில் பல மர்மங்களும் அதற்கான க்ளூவும் காட்டப்படுள்ளன். இதனால் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஆர்வத்தோடு கதையோடு நாம் பயணிக்க இயல்கிறது. இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்கியதுமே, சீக்கிரம் சீட்டுக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு தோன்றுவது இதனால்தான். சமீப காலத்தில் கோவை சரளா காமெடி என நினைத்து ஓவராக சத்தம் போட்டு பேசுவாரே, அப்படியெல்லாம் இதில் கடுப்பக்காமல் செய்யாமல், தனது ட்ரேட் மார்க் எதுகை மோனை பேச்சால் காமெடி செய்திருப்பது முதல் பாதிக்கு மற்றொரு பலம் என்றே சொல்லலாம்.
இப்படத்தின் முதல் பாதி பலமாக இருக்கும் போது இரண்டாம் பாதி சற்று பலவீனமாக தான் உள்ளது.தானே பலமுறை, அடித்து துவைத்த அதே டெம்ப்ளேட்டை சுந்தர் சி பயன்படுத்தியுள்ளார். கிளைமேக்ஸ் நெருங்கும்போது சுந்தர் சி காரில் பரபரப்பாக போவது, இன்னொரு பக்கம் அம்மன் பாடல் இசைக்கப்படுவது என முந்தைய படத்தின் ரீலை மாற்றி இதில் போட்டுவிட்டார்களா என்ற சந்தேகத்தோடு, கண்ணை கசக்கி பார்க்க வைக்கிறது காட்சிகள். அம்மன் வந்து தீமையை அழிப்பது கிளைமேக்சாக இருப்பது சரியாக தான் உள்ளது.கண்டிபாக நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இது அமைந்திருக்கிறது.நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.