Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அடுத்தாண்டு ஜனவரியை டார்கெட் செய்கிறதா விடாமுயற்சி படக்குழு? #Vidaamuyarchi

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், “துணிவு” படத்தை தொடர்ந்து “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது‌.

இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் “விடாமுயற்சி” படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்தநிலையில், “விடாமுயற்சி” படம் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் எதிர்பார்த்த தேதிக்கு முடியாததால், “விடாமுயற்சி” திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

Read more

Local News