வயநாடு நிலச்சரிவு சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. அதிகபட்சமாக 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த நிலச்சரிவினால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் மகிழ்ச்சியாக வண்ணமயமாக காணப்படும் வயநாடு, ஜூலை 29ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. இந்திய ராணுவம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
வயநாட்டில் இப்படியொரு இயற்கை சீற்றம் ஏகப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டதை அறிந்த விக்னேஷ் சிவன், உடனடியாக ரவுடி பிக்சர்ஸ் சார்பாக 20 லட்சம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதுதொடர்பான அறிவிப்பை தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.