பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.500 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இதனைத் தயாரிப்பு நிறுவனம் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அந்த 500 கோடிகளில், அமெரிக்காவில் மட்டும் ரூ.83 கோடி வசூலாகியுள்ளது. அங்கு 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து புதிய சாதனையை அடைந்துள்ளது. முதல் வார இறுதியில் வேறு எந்த இந்தியத் திரைப்படமும் இந்த அளவிற்கு வசூலிக்கவில்லை என அங்கு படத்தை வெளியிட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இப்படம் பெற்றுவரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, இயக்குனர் நாக் அஸ்வின் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ‘பாகுபலி 2’ திரைப்படத்திற்குப் பிறகு பிரபாஸுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.