Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தனுஷ் நீயெல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா நீ எல்லாம் ஒரு? பரபரப்பை கிளப்பிய கே.ராஜனின் பேச்சு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷூம் ஐஸ்வர்யாவும் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் இணைந்து வாழ வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்நிலையில், இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவை எடுத்து நிரந்தரமாக பிரிய முடிவு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னதுமட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் கே.ராஜன் தனுஷை வார்த்தைகளால் கடுமையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் ஓப்பனாகவே கேட்கிறேன் பல பெண்களோடு அப்படி என்ன உனக்கு வாழ்க்கை அவசியம் என கே.ராஜன் நடிகர் தனுஷ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவர் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தனுஷ் நீ ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? என பலர் கேட்கும் அளவுக்கு நீங்கள் வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு நீங்கள் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.தனுஷ் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் போது அவர் இப்படி செய்வது சரியா என கேட்டு நெருக்கி உள்ளார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் இப்படி ஆதாரம் இல்லாமல் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை வைக்கலாம் என கே.ராஜனின் பேசிய பேச்சுக்கு அவருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அடுத்தவர் குடும்ப வாழ்க்கையில் சம்பந்தமே இல்லாமல் நுழைய கூடாது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News