Saturday, September 14, 2024

கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தும் ஷூட்டிங்-ஐ நிறுத்தாமல் நடித்த விஜய்… தி கோட் குறித்து திலீப் சுப்பராயன் பகிர்ந்த சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், 300 கோடி ரூபாய் வருவாயை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தி கோட் படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், தி கோட் படத்தில் நான் ஒரு ஃபேன்பாயாகத்தான் வேலை செய்தேன். இதற்கு முன்பு விஜய்யுடன் பணியாற்றினாலும், இந்த படம் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. விஜய் இந்த படத்தில் உள்ள சண்டைக்காட்சிகளுக்காக மிகவும் உழைத்தார். குறிப்பாக மெட்ரோ சண்டை காட்சியில், விஜய் தான் நேரடியாக நடித்தார்; எந்த டூப் கண்டதும் பயன்படுத்தப்படவில்லை. டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் அவரது முகத்தை மட்டும்தான் மாற்றம் செய்தோம். அந்த காட்சி மிகவும் சிறப்பாக வந்தது.

அதேபோல், ரஷ்யாவில் அப்பா விஜய்யும் மகன் விஜய்யும் பைக்கில் செல்லும் காட்சியை எடுத்தபோது, சிறிது தூறல் இருந்தது. அதன் காரணமாக சாலை ஈரமாக இருந்தது. ஆனால், அதை நாங்கள் கவனிக்கவில்லை. விஜய் பைக்கை ஓட்டிக்கொண்டிருக்கும் போது, சறுக்கி விழுந்தார். அப்போது அவரது கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

நாங்கள் பதட்டத்துடன் நாளை படப்பிடிப்பு வைத்துக்கொள்ளலாம் என கூறினோம். ஆனால் அவர், அதெல்லாம் இல்லை, எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள், விளையாடுறீங்களா? என்று கேட்டார். 20 நிமிடங்கள் மட்டும் ஓய்வு எடுத்து மீண்டும் ஷூட்டிங்கிற்காக வந்துவிட்டார். அதேபோல், மெட்ரோ சண்டை காட்சியில், ஜெயராமுக்குப் பின்வருகின்ற விஜய் நிற்கும் காட்சியை எடுக்க நாம் மறந்துவிட்டோம். அதை விஜய் சரியாக நினைவுபடுத்தி, “அதை எடுங்கள்” என்று கூறினார். அவரது காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டிருந்தன, ஆனால் அந்த ஒரு காட்சிக்காக இரவு 1 மணிக்கு வந்து நடித்துவிட்டு சென்றார். அவரின் அர்ப்பணிப்பு இந்த அளவு அதிகம்,” என்று பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News